நோக்கு

வினைத்திறன், ஒத்துழைப்பைப் போன்று மக்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய உயர் மற்றும் பண்புசார் தரம்மிக்க சமூக சேவையினை வழங்கும் மாகாண சபைகள மற்றும் உள்ளூராட்சி முறையினை ஏற்படுத்தல்.

செயற்பணி

 • மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற முறையினை விருத்தி செய்வதற்கான கொள்கைகள் உட்பட கொள்கைகனள வகுத்தல்.
 • மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு அவற்றின் அதிகாரங்களைப் பயன்படுத்தி சேவைகளை வழங்குவதற்காக அவற்றின் இயலுமைகளை மேம்படுத்தல்.
 • மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற முறை மூலம் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தல்.
 • மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள் உட்பட ஏனைய நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணி சகலரினதும் சுபீட்சத்திற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.

விடயப்பரப்பு மற்றும் செயற்பாடுகள்

2015.09.30 ஆம் திகதிய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட புதிய அமைச்சுக்களின் விடயப் பரப்புக்கள் மற்றும் பணிகள் தொடர்பான அறிவித்தலுக்கமைய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விடயப்பரப்புக்கள் மற்றும் பணிகள் கீழ் குறிப்பிடப்பட்டவாறு அமைகின்றன.

 • மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவன விடயப்பரப்பு உட்பட உள்ளூராட்சி இலங்கை நிறுவகம் மற்றும் உள்நாட்டுக் கடன் அபிவிருத்தி நிதியம் ஆகிய நிறுவனங்களின் உரிய கொள்கைகள், வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளை வகுத்தலும் பின்னூட்டல்களை மேற்கொள்ளல் மற்றும் மதிப்பீடுகள்.
 • மாகாண சபைகளுக்குரிய பணிகளை மேற்பார்வை செய்தல்.
 • மாகாண சபைகளின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல்.
 • உள்ளூராட்சி நிறுவனங்களுக்குரிய அரச பணிகள்
 • பொதுவசதிகளை விருத்தி செய்வதற்காக உள்ளூராட்சி நிறுவனங்களுக்குக் கடன் வசதிகளை வழங்குதல்.
 • உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பயிற்சியளித்தல்.
 • மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவன ஆளுகையின் சகல கோணங்கள் தொடர்பிலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
 • உள்ளூர் நல்லாட்சி தொடர்பான இலங்கை நிறுவகம் மற்றும் உள்நாட்டுக் கடன் அபிவிருத்தி நிறுவகம் ஆகிய நிறுவனங்களுக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள ஏனைய சகல விடங்களுக்குரிய பணிகள்.
 • மேலே குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் மேற்பார்வைப் பணிகளை மேற்கொள்ளல்.

கொள்கைகள் மற்றும் உபாயத் திட்டங்கள்

கொள்கைகள்

மாகாணங்களில் சுயமான உறுதியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தி சமமின்மைகளைக் குறைத்து மற்றும் மொத்தத் தேறிய உற்பத்திக்கு மாகாணங்களிடமிருந்து கிடைக்கும் பங்களிப்பினை விருத்தி செய்தல்.

உபாயத் திட்டங்கள்
 • நல்லாட்யின் மூல அம்சங்களைப் பின்பற்றி அந்தந்த மாகாணங்களில் காணப்படும் மானிட மூலதனம் மற்றும் சூழல் வளத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தி சகல மாகாணங்களுக்கும் வருமானத்தை ஈட்டும் இயலுமைகளை விருத்தி செய்தல்.
 • குடியேற்ற வெளியேறுகை உயரிய மட்டத்தில் காணப்படும் மாகாணங்களில் அம்மட்டத்தை மட்டுப்படுத்துவதற்காக மிகுந்த பொருத்தமான கொள்கைகள் மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களை வகுத்தலும் அறிமுகப்படுத்தலும்.
 • நாட்டின் மொத்த சமூகப் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவதற்காக அவ்வவ் மாகாணங்களில் காணப்படும் மானிட வளப் பயன்பாட்டினை உறுதிப்படுத்தல்.
 • கீழ் மட்டத்திலிருந்து சமூக அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சமூகப் பங்கேற்பினை விருத்தி செய்தல் மூலம் மாகாணங்களில் காணப்படும் வளங்களை நேரடிப் பயன்பாடு மற்றும் கிராமிய சமூகத்தின் இயலுமைகள் மற்றும் திறமைகளை வலுப்படுத்தல்.
 • ஒவ்வொரு மாகாணங்களிலும் காணப்படும் இயற்கை வளங்களை நிலையான செயற்பாட்டிற்கமையப் பயன்படுத்துவதினை உறுதிப்படுத்துவதுடன் அனர்த்த அபாயங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான செயற்பாடுகளை பிரதேச மட்டத்தில் அபிவிருத்திச் செயற்பாடுகளுடன் கூட்டிணைத்தல்.
 • மானிட வள விருத்தி மற்றும் விஞ்ஞான அடிப்படைக்கமைய உள்ளூராட்சி மன்றங்களை மேம்படுத்துவதன் மூலம் பயன்மிக்க வினைத்திறன் கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிருவாக முறையினை உறுதிப்படுத்தல்.