Secretaryதிரு. எச்.டி. கமல் பத்மசிறி
செயலாளர், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான கொள்கைகளைத் தயாரிக்கும் பணி இந்த அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு மேலதிகமாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பயிற்சியளிக்கும் நடவடிக்கைகள் இந்த அமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி தொடர்பான இலங்கை நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக உள்ளூர் கடன் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்ற அபிவிருத்தி கடன் உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அத்துடன் 13வது அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக வெளிநாட்டு கருத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் இந்த அமைச்சுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் விரிவான விடயப்பரப்பில் பாரிய கடமைகளை  இந்த அமைச்சு நிறைவேற்றுகின்ற அதே வேளையில் செயற்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பாக உரிய தரவுகள் இந்த இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அது தொடர்பாக ஏதேனும் முன்மொழிவுகள் இருந்தால் இந்த அமைச்சுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தயவாகக் கேட்டுக்கொள்ளுகின்றேன்.