Hon. Ministerகௌரவ. பைசர் முஸ்தாபா அவர்கள்
அமைச்சர் - மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

உலகத்தில் தலைசிறந்த ஆட்சிமுறைக்கு சிரேஷ்ட வரலாறு ஒன்றுக்கு உரித்தான எமது நாடு 1505 மதல் இடம்பெற்ற அந்நிய தாக்கம் காரணமாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்வது ஆரம்பமானது. அன்று முதல் இன்று வரை இலங்கையின் ஆட்சி கட்டமைப்பு வெளிநாட்டு சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுவது பெரிதும் கவலைக்குரிய விடயமாகும். கடந்த காலத்தில் நிலவிய உள்ளூர் அடையாளத்துடனான ஆட்சிமுறையில், இந்த நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த பொருளாதாரத்துடனான சமூகமுறையொன்று இருந்தது. அந்த ஆட்சிமுறையின் தனித்துவமான தன்மை மாகாண மற்றும் பிரதேச நிர்வாகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகும். அன்றிருந்த சக்திவாய்ந்த தன்மையைக் காரணமாகக் கொண்டு  மாகாண மற்றும் பிரதேச நிர்வாகமும் தேசிய பொருளாதாரத்துடன் பாதுகாப்பும் சக்தியும் வாய்ந்ததாக இருந்தது.

பிரதேச ரீதியாக பலம்வாய்ந்ததாக இருந்த ஆட்சிமுறையில் ஒருவித ஒவ்வாத தன்மை ஏற்பட்ட நாள்முதல் இன்று வரை இந் நாட்டின் அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியே நிகழ்ந்தது. அனைத்து துறைகளிலும் இருந்த நெருக்கடியான நிலைமையின் அடிப்படையில் இற்றைவரை நாம் வந்த பயணத்தின் முடிவுக்கு வந்துள்ளோம்.

அதுபற்றி புரிந்துணர்வுடன் செயற்படுகின்றவர்கள் மக்களின் இறைமையை அதிகாரத்தின்மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த உறுதிப்படுத்தலில் இருக்கின்ற மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற மாகாண மற்றும் பிரதேச ஆட்சிமுறையை உருவாக்குவதற்காகத் தலைமை தாங்குவதற்கு நான் பெற்றுள்ள பொறுப்பை சக்திவாய்ந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காக ஆகக்கூடியளவில் நிறைவேற்ற என்னை அர்ப்பணித்துக்கொள்ளுவேன் என்பதைத் தெரிவிக்கின்றேன்.

ஒன்பது மாகாண சபைகள், 24 மாவட்டங்கள், 335 உள்ளூராட்சி நிறுவனங்கள் என்பவற்றில் சக்திவாய்ந்த நிர்வாக பொறிமுறையொன்றை ஸ்தாபித்து ஒவ்வொரு பிரசைக்கும் பொது தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் அத்தேவைகளை உற்பத்திசெய்கின்ற தோற்றுவாய்களைப் பலப்படுத்தும் ஒரே பொறுப்பைக் கொண்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இப் பெரும் பொறுப்பை ஆகக்கூடியளவில் நிறைவேற்ற அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் பணியாட் தொகுதியினரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுகின்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர் என்பதை இங்கு பெருமிதத்துடன் தெரிவிக்கின்றேன்.